ஆசையாய் பார்த்த கண்கள் அந்நியப்பட்டுக் கிடக்கின்றது
பின்னிக்கோர்த்துக் கொண்ட விரல்கள் பிரிந்து தூரமாய் நிற்கிறது
காதலை மொழிந்த இதழ்கள் கடுஞ்சொல்லின் கூடாரமானது
இப்டித்தான் இருப்பாயா..
இருந்து கொள்
என் பேரன்பும் பெருங்காதலும்
தராத நிம்மதி
என் பிறந்தவீட்டின்
தங்கம் தருமெனில்
நீயே சத்தமிட்டு கூறிக் கொள்
இவளின் ப்ரியம் விற்பனைக்கல்லவென்று.. 😊
#வரதட்சணை
இந்த அவல நிலை என்று ஒழியுமோ 🙄☺️
ReplyDeleteசந்தைகளில் ஏலம் போட பெண்கள் விற்பனை பொருள் அல்ல இந்த சமூகம் வரதட்சணை பிடியில் இருந்து திருந்த வேண்டும்
ReplyDelete