Monday, 23 March 2020

காதல் தீ

பாதங்களை பற்றிக்கொள்

விரல்களை நெறி

கழுத்தில் புதைந்துவிடு

மார்பில் தடம் பதி

கன்னக்கதுப்பை செம்மையாக்கு

காதுமடல்களை கூசச்செய்

இமைகள் மூடியிருக்க
இனம்புரியா உணர்வினை
விழிக்கச் செய்

நீ மூட்டிய தீயை
நீயே அடக்கிவிடு
என்னில் அடங்கி

நீ மீட்டிய அதிர்வை
நீயே ஸ்வரமாக்கு
சிணுங்கல்களால்

கதறும் என் அணுக்களை
சமாதானப்படுத்து

நடுங்கும்  என் தேகத்தை
ஆளுகை செய்

தனி உலகம் நமக்கு வேண்டாம்

நம் தனிமையே நம் உலகம் தான்💕




Wednesday, 11 March 2020

அவனின் அவள் 💕

தோழி காதலியென
அவளை
பிரித்து பார்க்க
முடியாது

தோழியென ஆறுதல் சொல்வாள்
சட்டென்று காதலியாய் மாறி சண்டையிடுவாள்

அவள் அப்படி தான்
அவளிடம்
பிடித்ததும் அது தான்

அவள் வந்ததும்
அழகானது கவிதை,
கவிதையானது வாழ்க்கை
இனிதானது விடியல்
இனிப்பானது இரவு
நீ நீ என்று
நிறைந்தது என் நினைவு 💕💕


Friday, 21 February 2020

தவிப்பு

வழக்கமான நேரம் 
தாண்டியதும் 

கடிகாரத்திற்கும் வாசலிற்கும் ஊசலாடும் கண்கள்

வண்டி சப்தம் 
கேட்கிறாத 
என கூர்மையாகும் காதுகள் 

எடுக்கப்படாத அலைபேசி அழைப்பால், 
பதில்வராத குறுஞ்செய்தியால்
பரிதவிக்கும் மனது

எல்லா கலக்கங்களும் 
நீ வந்தவுடன் 
சட்டென்று 
இறுகத்தழுவி
கண்ணீராகியது 💕💕


Thursday, 20 February 2020

நிறைவு

"பிளிஸ் பிளிஸ்..இரண்டே நிமிடம் மட்டும்"  என்றபடி

பேசும் நிமிடத்தில் மொத்த காதலும்

தூங்கும் நிமிடத்தில் மொத்த சுகமும்

கிளம்பும் நிமிடத்தில் மொத்த அழகும்

செய்யும் சமையலில் மொத்த சுவையும்

நிறைந்திருப்பதுபோல ஒரு உணர்வு ஆட்கொண்டுவிடுகிறது 😌😌

என் உயிரின் உயிர்

ஊன் மறந்து
உறக்கம் துறந்து
சுத்தம் விடுத்து
கவனமாய் வளர்த்து
நோயில் தவித்து
எழிலில் மகிழ்ந்து
குறும்புகளை ரசித்து
தவறுகளை திருத்தி
சரிகளை பாராட்டி

உன் புன்னகைக்காக
என் தேவை குறைத்தது
எல்லாம்

இயலாத காலத்தில்
எனை கவனித்துக் கொள்வாய் என்றல்ல..

நீ என் உயிரின் உயிர் என்பதாலயே 💕💕


மழலையின் ஸ்பரிசம்

ஐவிரல் கொண்டு
என் ஒரு விரல்
பற்றுகிறாய்...

மொத்தமாக
அள்ளிக்கொள்ள
மனம் துடிக்கிறது 😍😘😘


மழலை

உதைக்கும்
இளஞ்சிவப்பு பாதம்

பற்றி பிடிக்கும்
பிஞ்சு விரல்கள்

குறுகுறு பார்வையாக
குட்டி கருவிழிகள்

முன் நெற்றியில்
புரளும் தலைமுடி

வசம்பு ,ஜவ்வாதுவுடன்
பால் மணமுமாய்

மழலை 😍😍😘😘


நீயே

கண்ணெதிரே
தோன்றி மறையும்
காட்சிப்பிழையும்
நீயே

தானாகவே
கை எழுதும்
எழுத்துப்பிழையும்
நீயே

ஓயாமல் உதடுகள்
முணுமுணுக்கும்
உச்சரிப்பு பிழையும்
நீயே

பிழையாய் வந்தாலும்
எனைப் பிழைக்கச்
செய்பவனும் நீயே 💕💕

காதல்

விரல்களைத் தான்
பற்றி இழுக்கிறாய்..
சிறைப்பட்டது 
மனம் 💕💕 


நினைவுகள்

விழியோர நீர்துளிக்கும்

இதழோர புன்னகைக்கும்

பேரலையாய் ஆர்ப்பரிக்கும் மனதிற்கும்

உனதன்பை உணர்த்தி கொண்டிருக்கும்
இத் தனிமைக்கும்

உன் நினைவுகளின்
துணை ஒன்றே போதும் 💕💕

Tuesday, 18 February 2020

என்னவன்


தரிசாய் இருந்த
மனதினுள்
மழையாய் வந்து
குளிரச் செய்து
ஏக்கங்கள் அத்தனையும்
கரையப் பண்ணி
புதிதாய்
எனை மாற்றினாய்..

நெஞ்சம் கலந்து
சிந்தை நிறைந்து
உயிராய் மாறிய
விந்தையை நினைந்து
நாம் சந்தித்த
தருணங்களை
புன்னகையுடன்
அசையிடுகிறேன்..

இத்தனை நாளை
வீணடித்து
ஏனடா
தாமதமாக வந்தாய்!! 💕💕


மகளதிகாரம்

பெண் தான் வேண்டுமென
கருவிலயே பெயரிட்டு
கொஞ்சி மகிழ்ந்தேன்
மேடிட்ட வயிற்றோரம்
செல்லமாய் முட்டி
என் அழைப்பை
அங்கீகரித்தாள் 

நடுச் சாமத்தில் 
பொக்கைவாய் சிரிப்பில்
குதூகலிப்பவளை கண்டு
பொக்கிஷத்தை கையில் அள்ளினேன் 
என் தூக்கமும்
தூர நின்று
தேவதையை ரசித்தது 😍

சுட்டித்தனத்தை சிதறவிட்டு
குறும்புச் சிரிப்பால்
கொள்ளையிடுவாள்..

என் பொய்க் கோபம் உணர்ந்து
செல்ல முத்தமிட்டு 
சட்டென்று கழுத்தை கட்டி
பட்டென்று நெற்றி முட்டுவாள்

இவளை எப்படி கோபிப்பது
என இதுவரை
எனக்கு தெரியவில்லை..

இனிமேலும் 
அறிய விரும்பவில்லை 

#செல்ல_மகள் 💕 

காதல்

கடற்கரையில் 
ஆர்வத்தோடு 
அங்குமிங்கும் ஓடி
சிப்பிகளை சேகரிக்கும் 
சிறுமியாய்...

நீயும் நானும் 
பேசிய ஒவ்வொரு 
வார்த்தைகளையும் 
இதயக்கூட்டிலே
சேகரிக்கிறேன் 💕💕