நேரம்
கொஞ்சம் கொஞ்சமாக
கடந்து
கொண்டிருக்கிறது
இன்னும் நான்
என்ன
செய்ய வேண்டும்
என்மேல்
என்ன தவறு
என்ற பதட்டம்
ஆக்ரமிக்கின்றது
நகம் கடித்தபடியே
கண்கள் தாமாகவே
கடிகாரத்தைப்
பார்க்கின்றது
எதிர்பார்த்த
அந்த வேளையில்..
வந்து
நிம்மதியைத்
தந்தது
குக்கரின்
முதல்
விசில் சப்தம்
No comments:
Post a Comment